பாசன விவசாயிகள் செயல்பாடு குறித்து அறியபொதுப் பணித் துறை பொறியாளர்கள் வருகை

பாசன விவசாயிகள் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிய கவுந்தப்பாடி கீழ்பவானி முறைநீர் பாசன சபை

பாசன விவசாயிகள் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிய கவுந்தப்பாடி கீழ்பவானி முறைநீர் பாசன சபை அலுவலகத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுப் பணித் துறைப் பொறியாளர்கள் வந்தனர்.
திருச்சிராப்பள்ளி பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள தஞ்சை, விழுப்புரம், கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட பொதுப் பணித் துறையில் நீர்வள ஆதார அமைப்பு, நில நீர் பிரிவு கட்டடப் பிரிவுகளைச் சேர்ந்த உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் குழுவினர் பாசன விவசாயிகள் அமைப்பு செயல்பாடு முறைகளை அறிய கவுந்தப்பாடி கீழ்பவானி முறைநீர் பாசன சபை அலுவலகத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஜெகன் தலைமையில் வந்தனர்.
இங்கு நடைபெற்ற கூட்டத்தில் பகிர்மான கமிட்டித் தலைவர் கே.ஆர்.லோகநாதன் தலைமை வகித்தார். 
கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயல்பாடுகள் குறித்து துணைத் தலைவர் அ.ராமசாமி, பகிர்மான கமிட்டி செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி ஆகியோர் பேசினர்.
மதகு பகுதியில் நீர் பிரிப்பு தொட்டி மூலம் நான்கு பிரிவுகளாக பிரித்து நீர் பாய்ச்சும்  முறைகள், பாசன சபை செயல்பாடுகள், முறைப்பாசன பட்டியல் படி நீர் பாய்ச்சுதல் போன்ற விவரங்களை பொறியாளர்கள் குழு நேரடியாக அறிந்து கொண்டனர்.  
நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் பா.அ.சென்னியப்பன், யு 8 பி பொருளாளர் எம்.என். சுப்பிரமணியம், செயலாளர் எஸ்.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com