சித்திவிநாயகர், கன்னிமார் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

மொடக்குறிச்சியை அடுத்த திருமங்கலம் சித்திவிநாயகர், கன்னிமார் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

மொடக்குறிச்சியை அடுத்த திருமங்கலம் சித்திவிநாயகர், கன்னிமார் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இந்த ஆலயங்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கணபதி வழிபாட்டுடன்  சனிக்கிழமை காலை துவங்கியது. தொடர்ந்து எஜமான சங்கல்பம், கணபதி யாகம், துர்க்கா லட்சுமி, சரஸ்வதி யாகம், நவக்கிரக யாகம் பூர்ணாகுதி பூஜைகள் நடைபெற்றன. 
காவிரியில் தீர்த்தம் எடுத்துவர பக்தர்கள் காலை 9 மணிக்கு புறப்பட்டு சென்றனர். மாலை 5 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கும்ப பூஜை, அங்குரம், ரக்ஷாபந்தனம், இரண்டாம் கால யாக வேள்வி, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
காலை 7மணிக்கு மேல் விநாயகர், கன்னிமார்தேவி சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அவல்பூந்துறை சிவஞான சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர்.
இதைத் தொடர்ந்து, மகாஅபிஷேகம், கோ பூஜை, தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. 
 இந்த விழாவில், நவரசம் கல்லூரித் தலைவர் தாமோதரன், செயலாளர்  குமாரசாமி, பொருளாளர் பழனிசாமி, தி அகாதெமி தலைவர் ஆர்.பி.கதிர்வேல், பொருளாளர் பொன்னுவேல், நவரசம் பள்ளித் தலைவர் தாமோதரன், பொருளாளர் பி.சிவகுமார், கோயில் நிர்வாகிகள் காசிலிங்கம், ராமலிங்கம், பெரியசாமி, குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com