சிவகிரி அருகே ஆடு திருடிய 3 பேர் பிடிபட்டனர்

கொடுமுடி அருகே உள்ள சிவகிரி பகுதியில் ஆடுகளைத் திருட முயன்ற 3 பேர் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டனர்.

கொடுமுடி அருகே உள்ள சிவகிரி பகுதியில் ஆடுகளைத் திருட முயன்ற 3 பேர் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டனர்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள மொசுக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(40) விவசாயி. இவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பட்டியில் 10 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். 
இந்நிலையில், சந்திரசேகரன் ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு விட பட்டிக்கு வந்தார். அப்போது, பட்டியில் இருந்த 2 ஆடுகளை 5 பேர் திருட முயற்சிப்பதைப் பார்த்து, அக்கம் பக்கத்தில் உள்ள இளைஞர்களைக் கூட்டி வந்துள்ளார். இதைக் கண்ட 5 பேரும் தாங்கள் பிடித்து வைத்திருந்த ஆட்டை கீழே போட்டுவிட்டு, இருசக்கர வாகனங்களையும் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் அவர்களைத் துரத்தியுள்ளனர். இதில் 3 பேர் பிடிபட்டனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 3 பேர் சிவகிரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
காவல் துறையினர்  விசாரணையில் மேல்மலையம்பாளையம் காலணியைச் சேர்ந்த பிரகாஷ் (23), நவீன்(21), அஜித் என்ற வேலுச்சாமி(22) என்பதும், மேலும் அவர்களுடன் வந்து தப்பியோடிய இருவர், மலையம்பாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சின்ராஜ், காட்டூரைச் சேர்ந்த சந்துரு என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சிவகிரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com