ஈரோடு மாவட்ட வனப் பகுதிகளில் மார்ச் 31 வரை மலையேற்றப் பயிற்சிக்குத் தடை

கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் மலையேற்றப் பயிற்சிக்கு மார்ச் 31 ஆம் தேதி வரையில் வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.  


கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் மலையேற்றப் பயிற்சிக்கு மார்ச் 31 ஆம் தேதி வரையில் வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.  
  தேனி மாவட்டம், குரங்கணி வனப் பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 23 பேர் உடல் கருகி பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 இந்த சம்பவத்தை தொடர்ந்து ஈரோடு மாவட்டம், ஈரோடு, சத்தியமங்கலம், ஆசனூர் வனக் கோட்டங்களில் மலையேற்றப் பயிற்சிக்கு (டிரெக்கிங்கு) வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். இந்தத் தடை பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிக்கும் என ஈரோடு மண்டல வனப் பாதுகாவலர் வி.நாகநாதன் தெரிவித்தார்.  
குடிநீர்ப் பிரச்னையை சமாளிக்க ரூ.2.85 கோடி:   இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் கூறியதாவது:
 ஈரோடு மாவட்ட, வனப் பகுதியில் அதிக விலங்குகள் வசிப்பதால், அவற்றுக்குத் தேவையான தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும். தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சில குளம், குட்டை, அணைகள் தவிர மற்ற நீர் வழிப் பாதைகளில் தண்ணீர் முற்றிலும் வற்றிவிட்டன.
 இதனால், மாவட்டத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் ரூ.2.85 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் வனப் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் ஆழப்படுத்தப்படும். ஆழ்துளைக்கிணறு, மோட்டார் போன்றவற்றை சீரமைத்து தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படும்.  தண்ணீர் தேக்கப்படும் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு அவ்வப்போது லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்படும். வன விலங்குகள் குடிக்க தண்ணீர் இல்லாவிட்டால், வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்புப் பகுதிக்கு வரும். அப்போது, தான் மனிதவிலங்குகள் மோதல், வயல்களை சேதப்படுத்துல் போன்ற சம்பவங்கள் நடக்கும். அதைத் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
ú மலும் கடந்தாண்டு அந்தியூர், பர்கூர் பகுதியில் மட்டும் 5 இடங்களில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
 அந்தந்தப் பகுதிகளில் தீத் தடுப்புக் கோடுகள் அமைக்கப்பட்டு, தண்ணீர் வசதிக்கான இடங்களை கண்டறிந்துள்ளோம். கிராமக் குழுக்கள் மூலம், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், தீ விபத்து ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவித்து கட்டுப்படுத்தவும் பயிற்சி வழங்கி உள்ளோம்.
 அன்னிய நபர்கள் காட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளோம். மீறி நுழைந்தால் கிராமக் குழு, வனத் துறையினர் மூலம் அறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளை ஒட்டிய வனப் பகுதிகள், வனத் துறையினர் மூலம் கண்காணிக்கப்படும். எளிதில் தீப்பற்றப்படும் பொருள்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 மேலும் தீ விபத்து நேரிட்டால் உடனடியாக நிகழ்விடத்துக்குச் செல்லும் வகையில் வனப் பகுதிகளிலேயே வனத் துறையின் சிறப்புக் குழுவினரின் முகாம்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com