சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்கிழமை தொடங்கியது.  

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்கிழமை தொடங்கியது.  
 மலைகளில் தலையாய மலையாக போற்றப்படும் சென்னிமலை. மலை மீது குமரக் கடவுள் பாலதண்டாயுதம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தைப்பூசத் தேர் மற்றும் பங்குனி உத்திர தேர் என தனித் தனியாக இரண்டு பெரிய தேர் உள்ளது.
 ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேரோட்டம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா வழக்கப்படி செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் மலை மேல் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடி ஏற்றி பங்குனி உத்திர விழாவை செவ்வாய்கிழமை துவக்கி வைத்தனர் .
கொடியேற்றத்துக்கு முன் முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும், மூலவர்க்கும் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது. தலைமைக் குருக்கள் ராமநாதசிவம் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்து, சேவல் கொடியை ஏற்றி விழாவை முறைப்படி துவக்கி வைத்தார். 
 இதைத் தொடர்ந்து முருகப் பெருமானுக்கு புதன்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது, தேரோட்டம் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறுகிறது, மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும்.
 வெள்ளிக்கிழமை காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் உற்சவமும் நடக்கிறது. சனிக்கிழமை காலை மகாதரிசனம் நடக்கிறது. இரவு மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது.
 விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com