கொங்கு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா

பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவியருக்கு பிரிவு உபசார விழா மற்றும் கல்லூரி வளாக நேர்காணல் மூலம் தேர்வாகியுள்ள மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு

பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவியருக்கு பிரிவு உபசார விழா மற்றும் கல்லூரி வளாக நேர்காணல் மூலம் தேர்வாகியுள்ள மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பணி நியமன ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, பெருந்துறை, கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளைத் தலைவர் பரமேஸ்வரி லிங்கமூர்த்தி தலைமை வகித்தார். கல்லூரித் தாளாளர் ஆர்.எம்.தேவராஜா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் வி.வேதகிரிஈஸ்வரன் வரவேற்றார். 
 விழாவில், சிறப்பு அழைப்பாளராக பெங்களுர் எமர்டெக்ஸ் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் இயக்குநர் ஜெயக்குமார் சுப்பிரமணியன் பங்கேற்று, வளாக நேர்காணலில் தேர்வாகிய மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
 இதில், கல்லூரி அறக்கட்டளைப் பொருளாளர் ஈ.ஆர்.கே.கிருஷ்ணன், அறக்கட்டளை உறுப்பினர்கள் பி.சச்சிதானந்தன், பி.தங்கவேலு உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி எஸ்.கோமதிசங்கர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com