கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில் யமஹா பயிற்சிப் பள்ளி துவக்கம்

பெருந்துறை, சீனாபுரம் கொங்கு ளோளர் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம், யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் யமஹா பயிற்சி பள்ளியை துவக்கியுள்ளது. 


பெருந்துறை, சீனாபுரம் கொங்கு ளோளர் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம், யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் யமஹா பயிற்சி பள்ளியை துவக்கியுள்ளது. 
விழாவுக்கு, கல்லூரித் தாளாளர் கே.சி.முத்துசாமி தலைமை வகித்தார். முதல்வர் என்.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். மெக்கானிக்கல் துறைத் தலைவர் கோகுலகிருஷ்ணன் வரவேற்றார். 
விழாவில், சிறப்பு அழைப்பாளராக யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் ரவீந்திர சிங் பங்கேற்று பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார்.
இந்தப் பயிற்சி பள்ளியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இரண்டு சக்கர வாகன தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு யமஹா நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணிபுரியும் வாய்ப்பு பெற்றுத் தரப்படும். பயிற்சி பள்ளியின் மூலமாக, மாணவர்கள் வாகன தொழில் துறையில் ஆராய்ச்சி செய்தல் போன்ற அனுபவங்களைப் பெறுவர். 
இப்பயிற்சி பள்ளி இந்தியாவின் 40 ஆவது யமஹா பயிற்சி பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயிற்சி பள்ளி இந்தியாவின் தன்னியக்கம் மேம்பாட்டு கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 விழாவில், யமஹா நிறுவனத்தின் துணைப் பொதுமேலாளர் பாலவெங்கடேஷ், மண்டல சர்வீஸ் மேலாளர் சங்கர்மணி, பயிற்சி அகாதெமி உதவி மேலாளர் நாகவெங்கட், கல்லூரியின் பெட்ரோகெமிக்கல் துறை இயக்குநர் அர்ஜுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரியின் யமஹா பயிற்சி பள்ளிப் பொறுப்பாளர் கெளரிசங்கர் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com