வால்பாறை எஸ்டேட் பகுதியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி துவக்கம்

வால்பாறை எஸ்டேட் பகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பின் புதிய சாலைகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்ப

வால்பாறை எஸ்டேட் பகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பின் புதிய சாலைகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
வால்பாறை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த காலங்களில் எஸ்டேட் பகுதியில் உள்ள சாலைகளை எஸ்டேட் நிர்வாகத்தினரே சீரமைத்தும், புதிய சாலைகள் அமைத்தும் வாகனப் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பப்பட்ட இந்த சாலைகள் பேருந்துகள் இயக்க முடியாத அளவுக்கு பழுதடைந்து நிலையில் உள்ளன. இதனால் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மக்கள் அவசர சிகிச்சைக்கு கூட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
எஸ்டேட் நிர்வாகத்தினர் சாலையை சீரமைக்க தொடர்ந்து முன்வராமல் இருந்ததோடு அரசு உத்தரவின்பேரில் எஸ்டேட் சாலைகள் அனைத்தையும் நகராட்சி வசம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒப்படைத்தனர்.
இதனிடையே எஸ்டேட் சாலைகளை நகராட்சி மூலம் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம், வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, கூட்டுறவு நகர வங்கித் தலைவர் வால்பாறை அமீது ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவின்பேரில், வால்பாறை நகராட்சி மூலம் ரூ. 17 கோடியில் எஸ்டேட் பகுதியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.மேலும், வால்பாறை நகர் சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. 20 ஆண்டுகளுக்குப் பின் எஸ்டேட் பகுதிகளில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவது எஸ்டேட் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com