குன்னூரில் டேன் டீ அலுவலகம் முற்றுகை

குன்னூரில் டேன் டீ தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தபோது அதிகாரிகள் சந்திக்க மறுத்ததால்

குன்னூரில் டேன் டீ தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தபோது அதிகாரிகள் சந்திக்க மறுத்ததால் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் டேன் டீ தேயிலைத் தொழிற்சாலை, தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். 
இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை, தமிழக அரசு மூலமாகப் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், கோத்தகிரியில் பணிபுரியும் டேன் டீ தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 10ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்காமல் தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. 
இதனால் ஊதியத்தை முன்னதாக வழங்கக் கோரியும், தொழிலாளர்களுக்கு நீண்ட நாளாக வழங்க வேண்டிய பணிக்கொடை, விடுப்பூதியம், மருத்துவ விடுப்பூதியம் பிரசவத் தொகை,  தொழிலாளர்களுக்கான வெம்மை ஆடை,  வன விலங்குகளின் அச்சுறுத்துதலில் இருந்து  பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குன்னூர் டேன் டீ தலைமை அலுவலகத்துக்கு மனு அளித்த வந்தனர். ஆனால், அவர்களை அதிகாரிகள் சந்திக்க மறுத்ததால், தொழிலாளர்கள் அனைவரும்  அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அதிகாரிகள் தரப்பில் ஒரு வாரத்துக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com