கோத்தகிரியில்  விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகில பாரத அனுமன் சேனா இந்து நல முன்னணி ஆகிய அமைப்புகள்

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகில பாரத அனுமன் சேனா இந்து நல முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் 75 விநாயகர் சிலைகள் திங்கள்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன. பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் டானிங்டன் பகுதிக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து மாலை 4 மணியளவில் விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டது. 
முன்னதாக அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அகில பாரத அனுமன் சேனா மாநிலத் தலைவர் சிட்கோ ராஜேந்திரன், மாநில மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி, நிர்மலா, மாநிலத் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் மோகன்ராஜ், இந்து நல முன்னணி மாநிலச் செயலாளர் மணிகண்டன், மாநிலத் தலைவர் மணி, மாவட்டச் செயலாளர் தேவா ஆகியோர் பேசினர்.
  அதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் காமராஜர் சதுக்கம், மார்க்கெட், கடை வீதி, பேருந்து நிலையம், ராம்சந்த் உள்ளிட்ட முக்கிய வீதிகள் எடுத்து வரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் உயிலட்டி நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com