மஞ்சூர் வழித்தடத்தில் கோவைக்கு இயக்கப்படும்   அரசுப் பேருந்தை முறையாக இயக்க வலியுறுத்தல்

மஞ்சூர் வழித்தடத்தில் கோவைக்கு இயக்கப்படும்அரசுப் பேருந்தை முறையாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மஞ்சூர் வழித்தடத்தில் கோவைக்கு இயக்கப்படும்அரசுப் பேருந்தை முறையாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து மஞ்சூர் வழித்தடத்தில் கோவைக்கு ஒரு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. பகல்12 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு கோவை புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்லும் இப்பேருந்து அங்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும், காரமடை, வெள்ளியங்காடு, முள்ளி, கெத்தை வழியாக மஞ்சூருக்கு இரவு 10 மணிக்கு வரும். 
இந்த வழித்தடத்தில் வெள்ளியங்காடு முதல் ஒணிகண்டி வரையிலான 40 கி.மீ. தூரம் அடர்ந்த வனப் பகுதிகளைக் கொண்டதால் இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். சில நேரங்களில் இந்த யானைகள் சாலையில் நின்று கொண்டு வாகனங்களைச் செல்லவிடாமலும் தடுத்து வருவது வழக்கம். 
இதனால் பெரும்பாலான நாள்களில் இந்தப் பேருந்து மிகவும் தாமதமாகவே மஞ்சூர் பகுதிக்கு வருகிறது.  இதனால், மஞ்சூரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில், கடந்த ஒருமாத காலமாக இந்தப் பேருந்து கோவை காந்திபுரம் வரை சென்றுவர வேண்டும் என போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது. 
அதன்படி, உதகை, மஞ்சூர் பகுதியில் இருந்து செல்லும் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி கொண்டு இப்பேருந்து கீழ்குந்தாவுக்கு வருகிறது. 
 இப்பேருந்து காந்திபுரம் சென்று திரும்பும் நிலையில், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளால் கவுண்டம்பாளையம் வருவதற்குள் மாலை 6 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. பின்னர், அங்கிருந்து கிளம்பும் பேருந்து காரமடை ரயில்வே கேட்டையும் கடந்து,  மஞ்சூர் வருவதற்குள் இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. 
இதனால் மஞ்சூரை சுற்றியுள்ள மேல்குந்தா, தொட்டக்கம்பை, தாய்சோலை, கரியமலை, முள்ளிமலை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் வாகனங்கள் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, பயணிகளின் நலன் கருதி போக்குவரத்துக் கழகம் வழக்கம்போல மாலை 5.30 மணிக்கு கவுண்டம்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து கீழ்குந்தா செல்லும் அரசுப் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
காந்திபுரம் செல்வதற்கு இந்தப் பேருந்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என மஞ்சூர் சுற்று வட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com