கூட்டுறவுத் தொழிற்சாலையில் பச்சைத் தேயிலைக்கு கொள்முதல் விலை நிர்ணயம்: இன்கோ நிர்வாகம் அறிவிப்பு

கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலையில் பச்சைத் தேயிலையை கொள்முதல் செய்வதற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குன்னூரில் உள்ள இன்கோ தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.


கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலையில் பச்சைத் தேயிலையை கொள்முதல் செய்வதற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குன்னூரில் உள்ள இன்கோ தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
 நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு 16 கூட்டுறவுத் தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
 பச்சைத் தேயிலை மீதான விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்ததால், குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
 இதனைத் தொடர்ந்து குன்னூர் இன்கோ சர்வ் நிர்வாகம் அனைத்து கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகளிலும் கொள்முதல் செய்யும் பச்சைத் தேயிலைக்கு மாதந்தோறும் முன்கூட்டியே குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி நடப்பு பிப்ரவரி மாதத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச விலை நிர்ணய விவரம் வருமாறு: 
கைகாட்டி, இத்தலார், நஞ்சநாடு, கரும்பாலம் ஆகிய தொழிற்சாலைகளில் கிலோவிற்கு ரூ.17, எடக்காடு, மஞ்சூர், பிக்கட்டி, மேற்குநாடு, மகாலிங்கா, கிண்ணக்கொரை ஆகிய தொழிற்சாலைகளில் கிலோவிற்கு ரூ.16, சாலீஸ்பரி, பந்தலூர் தொழிற்சாலைகளில் கிலோவிற்கு ரூ.15, பிராண்டியர், பிதர்காடு ஆகிய தொழிற்சாலைகளில் கிலோவிற்கு ரூ.14.50, எப்பநாடு தொழிற்சாலையில் கிலோவிற்கு ரூ.14 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com