கூடலூர் சிவன்மலையில் கிரிவலம்

கூடலூர் சிவன்மலையில் பௌர்ணமியையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிரிவலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கூடலூர் சிவன்மலையில் பௌர்ணமியையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிரிவலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
 மாசிமக பௌர்ணமியையொட்டி நீலகிரி மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சிவன்மலை அடிவாரத்தில் ஒன்றுகூடி மலையைச் சுற்றி சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவுக்கு கிரிவலம் சென்றனர்.
 கிரிவலத்தைத் தொடர்ந்து மலை உச்சியில் அமைந்து உள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் உலக அமைதிக்காகவும், நோயுற்றவர்கள் மற்றும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காகவும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
 சிவன்மலைக்குச் சென்றுவர அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்து வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் கேசவன், செயலாளர் நடராஜன், சிவன்மலை நிர்வாகி பாண்டு குருசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com