கூட்டுறவு வார விழா: 377 பேருக்கு ரூ. 3.88 கோடி கடன் உதவி: சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்குப் பாராட்டு

திருப்பூரில் நடைபெற்ற 65ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 377 பயனாளிகளுக்கு ரூ. 3.88 கோடி மதிப்பிலான கடனு உதவிகள், சிறந்த கூட்டுறவு


திருப்பூரில் நடைபெற்ற 65ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 377 பயனாளிகளுக்கு ரூ. 3.88 கோடி மதிப்பிலான கடனு உதவிகள், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
கூட்டுறவுத் துறை சார்பில் 65ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இரா.பழனிசாமி முன்னிலை வகித்தார்.
விழாவில் 377 பயனாளிகளுக்கு ரூ. 3.88 கோடி மதிப்பிலான கடன உதவிகள் மற்றும் மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கும், சிறந்த பொது விநியோகத் திட்ட விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கும் என 45 நபர்களுக்குப் பாராட்டுக் கேடயங்களை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்யபாமா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), வி.எஸ்.காளிமுத்து (தாராபுரம்), கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத் தலைவர் கே.பி. ராஜு, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பிரபு, கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர்கள் பழனி, கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com