ஸ்ரீஜெய்ராம் கல்லூரியில் 10 ஆம் ஆண்டு விழா

பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் உள்ள ஸ்ரீஜெய்ராம் பொறியியல் கல்லூரியின் 10 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.


பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் உள்ள ஸ்ரீஜெய்ராம் பொறியியல் கல்லூரியின் 10 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் ஸ்ரீஜெய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 10 ஆம் ஆண்டு விழாவுக்கு கல்லூரி துணைத் தலைவர் டி.கே.கருப்பண்ணசாமி தலைமை வகித்தார். பொருளாளர் எம்.கோவிந்தசாமி, கல்லூரி நிர்வாக அலுவலர் பேராசிரியர் எஸ்.அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எஸ்.நித்தியானந்தம் வரவேற்றார்.
 இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசியதாவது:
 மாணவர்கள் பயிலும் கல்வியை நன்றாக கற்க வேண்டும். எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்தை மாணவர்கள் கைவிட வேண்டும். தேடுதலில் இருந்து தான் வாழ்க்கை பயணம் தொடங்குகிறது. அதற்கு சிறந்த முதலீடு கல்வி தான். ஆங்கிலம் என்பது அறிவு அல்ல, அது உலக தொடர்பு மொழி மட்டுமே. படிக்கும் காலத்தில் சமூகம் சார்ந்த புத்தகங்கள், இலக்கியப் புத்தகங்களை படிக்க வேண்டும் என்றார். 
 இவ்விழாவில் பெங்களூரைச் பில்லவாரா தகவல் தொழில்நுட்ப தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் சஞ்சய்சிங், பொது மேலாளர் சேகர்சக்ரபோர்டி, கோவை அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குநர் எஸ்.என்.தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக மேலாண்மைத் துறை தலைவர் பி.மேகலாதேவி நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com