பல்லடம் அரசு கல்லூரிக்கு தையல் இயந்திரங்கள் வழங்கல்

பல்லடம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்காக சமூக ஆர்வலர்கள் சார்பில் 10 தையல் இயந்திரங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

பல்லடம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்காக சமூக ஆர்வலர்கள் சார்பில் 10 தையல் இயந்திரங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
 பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு பாட வகுப்பில் (பேஷன் டிசைன்)  மாணவ, மாணவிகள் 40 பேர் பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு பயிற்சி அளிக்க தையல் இயந்திரங்கள் இல்லாமல் திருப்பூரில் உள்ள மற்றொரு கல்லூரிக்கு சென்று பயிற்சி பெற்று வந்தனர்.
 இதைத் தொடர்ந்து பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் மாணவ, மாணவிகள் நலன் கருதி அவரது ஏற்பாட்டின் பேரில் பல்லடம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.எம்.ராமமூர்த்தி மூலம் 3 தையல் இயந்திரங்களும், பல்லடம் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் பி.கே.பழனிசாமி சார்பில் 2 தையல் இயந்திரங்களும், கூட்டுறவுச் சங்க இயக்குநர் பாரதி செல்வராஜ், ஒப்பந்ததாரர்கள் பூபதி, வெள்ளிங்கிரி ஆகியோர் தலா ஒரு தையல் இயந்திரங்களும், பனப்பாளையம் அதிமுக கிளை நிர்வாகி லட்சுமணன் டேபிள், கத்திரி போன்றவைகளை கல்லூரி முதல்வர் தேவி, துணை முதல்வர் ஜெயசந்திரன் ஆகியோரிடம் வழங்கினர்.
 இந்த நிகழ்ச்சியில் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன், கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.சித்துராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com