காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் வீரகாளியம்மன் கோயில் தேர் திருவீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தைப்பூச தேர்த் திருவிழா, வீரகாளியம்மன் கோயிலில் கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்நிலையில், வீரகாளியம்மன் கோயில் தேர் திருவீதியுலா சிவன்மலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேரில் வீரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு மலை அடிவாரம், பெரிய வீதி வழியாக பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.