உடுமலை, காங்கயத்தில் லெனின் நினைவு தினம்

பல்வேறு அமைப்புகளின் சார்பில் லெனின் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பல்வேறு அமைப்புகளின் சார்பில் லெனின் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
உடுமலை நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் லெனின் படத் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மத்தியப் பேருந்து நிலையம், ஏரிப்பாளையம், சேரன் நகர், சின்னவீரம்பட்டி, எம்ஜிஆர் நகர், இந்திரா நகர், சிவக்தி காலனி, யுகேபி நகர், சிங்கப்பூர் நகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் லெனினின் பொதுவுடமை கொள்கைகள் குறித்தும், அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
 நகரச் செயலாளர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், நகரக் குழு உறுப்பினர் கே.தண்டபாணி, கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
குரல்குட்டை கிராமத்தில் லெனின் நினைவு தின நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. லெனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் சார்பில்...: இக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் லெனின் நினைவு தின நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. லெனின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  மாவட்டச் செயலாளர் எம்.மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் கா.அப்பாஸ், நிர்வாகிகள் பால்நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காங்கயத்தில்...: லெனின் 95ஆவது நினைவு தினத்தை ஒட்டி  காங்கயம், பாரதியார் வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி, வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் காங்கயம் செயலர் திருவேங்கடசாமி, காங்கயம் தலைவர் குமாரசாமி, பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் நலச் சங்கத் தலைவர் செல்லமுத்து, அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்கத்  தலைவர் நாச்சிமுத்து உள்ளிட்டோர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com