தருமபுரியில் நாளை கூட்டுறவு வார விழா தொடக்கம்

தருமபுரி மாவட்டத்தில் 65 - ஆவது கூட்டுறவு வார விழா நவ.14-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் 65 - ஆவது கூட்டுறவு வார விழா நவ.14-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
இது குறித்து, தருமபுரி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் மா.சந்தானம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்ட 65-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா நவ.14 முதல் நவ.20 -ஆம் தேதி வரை ஒரு வாரம் காலம் நடைபெறவுள்ளது. முதல்நாளில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைமையகத்தில் கூட்டுறவு கொடியேற்று விழா மற்றும் அதியமான்கோட்டை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மரக்கன்று நடப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கூட்டுறவுத் துறைப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. நவ.15-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாப்பாரப்பட்டி சிவா கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இயற்கை வேளாண்மை மற்றும் செலவில்லா வேளாண்மை என்கிற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. நவ.16-ஆம் தேதி காலை 8 மணிக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்ததானம் முகாம் நடைபெறுகிறது.
நவ.17 காலை 10.45 மணிக்கு தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறும் விழாவில், மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். இதைத் தொடர்ந்து, நவ.18 காலை 8 மணிக்கு செம்மாண்டகுப்பம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பி.துரிஞ்சிப்பட்டி, செம்மாண்டகுப்பம், சின்னாங்குப்பம், சின்னம்பள்ளி கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. நவ.19 காலை 8 மணிக்கு தருமபுரி கூட்டுறவு நகர வங்கித் தலைமையகத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
சாமனூர், பேகாரஅள்ளி, இருமத்தூர், சிட்லிங் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கும் விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல, நிறைவு நாளான நவ.20-ஆம் தேதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொம்மிடி, கம்பைநல்லூர், அரூர் மற்றும் பாலக்கோடு கிளைகளில் கடன் வழங்கும் விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com