எய்ட்ஸ் தினத்தையொட்டி "மீம்ஸ்' போட்டி

வரும் டிச. 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் நாளையொட்டி தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் சார்பி

வரும் டிச. 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் நாளையொட்டி தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் சார்பில் நடத்தப்படும் "மீம்ஸ்' உருவாக்கும் போட்டியில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அழைப்புவிடுத்துள்ளார்.
எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு, தொற்றுள்ள மக்களின் ஆரோக்கியம், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு, ஒதுக்குதல் மற்றும் புறக்கணிப்புச் செயல்களில் ஈடுபடாமல் இருத்தல், தன்னார்வ ரத்ததானம், பால்வினை நோய்கள் குறித்தும் மீம்ஸ்களை உருவாக்கலாம். போட்டிக்குத் தொடர்பில்லாத திரைப்பட நடிகர்களின் படம், அரசியல் கட்சிகளின் சின்னம், கொடி, விலங்குகளின் படம், ஆபாசமான கருத்துகள், படங்கள், வசனங்கள் இடம்பெறக் கூடாது. அதேபோல, எந்த ஒரு கருத்தையும் நகல் எடுத்திருக்கக் கூடாது. போட்டியாளர்கள் தங்களது சுய புகைப்படத்துடன், மீம்ஸ்களை வரும் நவ. 25ஆம் தேதிக்குள் ‌m‌e‌m‌e​a‌d​a‌y.‌t‌n‌s​a​c‌s@‌g‌m​a‌i‌l.​c‌o‌m  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களை‌w‌w‌w.‌t‌n‌s​a​c‌s.‌i‌n என்ற இணையதளத்தில் அறியலாம். அல்லது 18004191800 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் தெரிவிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com