அரூர் அருகே பல்நோக்கு கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

அரூரை அடுத்த தம்பிசெட்டிப்பட்டியில் உள்ள பல்நோக்கு கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை


அரூரை அடுத்த தம்பிசெட்டிப்பட்டியில் உள்ள பல்நோக்கு கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் ஊராட்சி ஒன்றியம், செட்ரப்பட்டி கிராம ஊராட்சிக்குள்பட்டது தம்பிசெட்டிப்பட்டி கிராமம். இக் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிராம மக்களின் தேவைக்காக, 2013-14-ஆம் நிதி ஆண்டில், அரூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 8 லட்சத்தில் இக் கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்து சுமார் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எவ்வித பயன்பாட்டுக்கும் இக் கட்டடம் திறக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளது. இந்த பல்நோக்கு கட்டடம், தம்பிசெட்டிப்பட்டியில் இயங்கும் ரேஷன் கடையின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டது.
இந்த பல்நோக்கு கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதால், அந்த ஊரில் இயங்கும் ரேஷன் கடையானது தொடர்ந்து தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே, தம்பிசெட்டிப்பட்டியில் பயனற்று கிடக்கும் பல்நோக்கு கட்டடத்தைத் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடையை பல்நோக்கு கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதே தம்பிசெட்டிப்பட்டி கிராம மக்களின் எதிர்பார்ப்பு.
தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில்முகாமிட்டுள்ள யானைகள்
ஒசூர்,நவ.18: தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு பயிர்களை துவம்சம் செய்து வந்த 40 யானைகளை வனத் துறையினர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். அங்கு பேவநத்தம், சிவநஞ்சுண்டேஸ்வரன் மலைப் பகுதியில் முகாமிட்டிருந்த இந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வனக்குழுவினர் மரக்கட்டா வனப் பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த யானைகள் பல பிரிவுகளாகப் பிரிந்து கோட்டட்டி, லட்சுமிபுரம், புதூர், காடுலக்கசந்திரம் பகுதியில் உள்ள ராகி, தக்காளி, சோள பயிர்களை நாசம் செய்தன. பின்னர் அந்த யானைகள் பேவநத்தம் காட்டிற்கே மீண்டும் வந்தன. இந்த நிலையில், கர்நாடக வனப்பகுதியில் இருந்து மேலும் 20 யானைகள் ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்தன.
தற்போது தேன்கனிக்கோட்டையை சுற்றி 100 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பேவநத்தம் காட்டில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டாலும், மீண்டும் அதே பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com