சிட்லிங் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கோட்டப்பட்டி-சிட்லிங் சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோட்டப்பட்டி-சிட்லிங் சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டப்பட்டி முதல் சிட்லிங் வரையிலான தார்ச் சாலை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். இந்த வழித்தடத்தில் சிட்லிங், ஏ.கே.தண்டா, எஸ்.தாதம்பட்டி, மலைத்தாங்கி, தும்பல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த சாலை வழியாக நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், லாரிகள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் வந்துச் செல்கின்றன. இந்த நிலையில், சிட்லிங் முதல் கோட்டப்பட்டி வரையிலான தார்ச் சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது.
இதனால் இந்த சாலையில் நாள்தோறும் சென்று வரும் வாகன ஓட்டிகள், விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நிதி ஒதுக்கீடு செய்து, கோட்டப்பட்டி முதல் சிட்லிங் வரையிலான தார்ச் சாலையை சீரமைப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com