சத்துணவு ஊழியர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் கோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தருமபுரியில் வியாழக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காலமுறை ஊதியம் கோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தருமபுரியில் வியாழக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தொடங்கிய பேரணிக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் பேரணியை தொடங்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் கே.அண்ணாதுரை, மாவட்டச் செயலர் சி.காவேரி, பொருளாளர் கே.ராஜா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஏ.சேகர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: சத்துணவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சட்டப்படியான ஓய்வூதியம் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கேற்ப உணவூட்டு மானியம் ரூ.5 வழங்க வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டுக்கான பிடித்தம் செய்யப்படும் தொகையைக் குறைக்க வேண்டும். இத்திட்டத்தை சமையலர் மற்றும் உதவியாளர் அனைவருக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி பழைய பேட்டை, காந்தி சிலை அருகே தொடங்கிய ஊர்வலத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தர்மராஜா கோயில் சாலை வழியாக சென்ற ஊர்வலம், வட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com