மொரப்பூர் கொங்கு மெட்ரிக். பள்ளி நூறு சதவீதத் தேர்ச்சி

மொரப்பூர் கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் நூறு சதவீதத் தேர்ச்சி அடைந்துள்ளது.

மொரப்பூர் கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் நூறு சதவீதத் தேர்ச்சி அடைந்துள்ளது.
இப் பள்ளி மாணவர்கள் தேர்வில் 600க்கு 570, 565, 554 உள்ளிட்ட மதிப்பெண்களைப் பெற்று அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இப் பள்ளி மாணவர்கள் பாடவாரியாக தமிழ்98, ஆங்கிலம்97, இயற்பியல்95, வேதியியல்99, கணிதம்98, உயிரியல்96 உள்ளிட்ட மதிப்பெண்களை பள்ளியின் முதல் மதிப்பெண்களாகப் பெற்றுள்ளனர். நூறு சதவீதத் தேர்ச்சிப் பெற்றுள்ள கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரை மொரப்பூர் கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் டி. சந்திரசேகர், செயலர் அ. மோகன்ராசு, பொருளர் பி. வரதராஜன்,  தாளாளர்கள் இளங்கோ, தீர்த்தகிரி, பள்ளி முதல்வர் விமல்ராஜ், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஜெ. சர்மிளா தேவி, துணை முதல்வர் சதாசிவம், பள்ளியின் இயக்குநர்கள் எம். சாமிக்கண்ணு, பரந்தாமன், ராமு, குமார், வெற்றிச்செல்வன், நிர்வாகக் குழு  உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com