நிறுத்திவைப்பை அறியாமல் நேர்காணலுக்கு வந்த விண்ணப்பதாரர்கள்  

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்துக்கான நேர்காணலை நிறுத்தி வைக்கப்பட்டதை

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்துக்கான நேர்காணலை நிறுத்தி வைக்கப்பட்டதை அறியாமல் வெள்ளிக்கிழமை ஏராளமான விண்ணப்பதாரர்கள் வந்திருந்தனர்.
கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்துக்கான நேர்காணல் பிப். 22-ஆம் தேதி முதல் பிப். 28-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், இதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம் எனவும் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான செய்தி நாளிதழ்களில் வெளியானது. இந்த நிலையில், நேர்காணல் நிறுத்திவைக்கப்பட்ட அறிவிப்பு குறித்து அறியாமல், ஏராளமானோர் தருமபுரி, இலக்கியம்பட்டியில் உள்ள கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தனர். இதையடுத்து அலுவலகம் சார்பில், நேர்காணல் நிறுத்திவைக்கப்பட்டது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக அறிவிப்புப் பலகை அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டது. இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com