செந்தில் மெட்ரிக். பள்ளியில் பொங்கல் விழா

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.கந்தசாமி தலைமை வகித்து, மாணவர்கள் எவ்வித தீய பழக்கங்களுக்கும் இடமளிக்காமல் தூய எண்ணங்களோடு, தனி மனித ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார். முதுநிலை முதல்வர் ஆர்.பழனிசாமி வரவேற்றார். நிர்வாக அலுவலர் சி.சக்திவேல்,  துணைத் தலைவர் கே.மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) சமய் சிங் மீனா, காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் ஆகியோர் பொங்கல் விழா குறித்தும், வேளாண் தொழில், நீர்நிலைகளை காக்கவும், எதிர்காலத்தில் மாணவர்கள் சாதனையாளர்களாக திகழவும் பின்பற்ற வேண்டியவை குறித்தும் விளக்கி பேசினர். இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
நிர்வாக முதல்வர் எம்.கிருஷ்ணவேணி, துணை முதல்வர் எம்.வள்ளியம்மாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com