கூட்டுறவு வேளாண் சங்கத்தில் ரூ. 16 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் 310 மூட்டை மஞ்சள் ரூ. 16 லட்சத்துக்கு விற்பனையானது.
ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து இந்த மஞ்சள் விற்பனைக்கு வந்தது.
மஞ்சளைக் கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து 50 க்கும் மேற்பட்ட  வியாபாரிகள் வந்திருந்தனர்.
மறைமுக ஒப்பந்தப்புள்ளி  மூலம் ரூ. 16 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனையானது. விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ. 7,259 முதல்  ரூ. 8,469 வரை விற்பனையானது.
கிழங்கு ரகம் ரூ. 5,811முதல் ரூ. 6,758 வரையும், பனங்காளி ரகம் குவிண்டாலுக்கு ரூ. 7,009 முதல் ரூ. 10,100 வரையும் விலைபோனது. கடந்த வாரம் 310 மூட்டை மஞ்சள் ரூ. 16 லட்சத்துக்கு விலை போனது. 300 மூட்டை மஞ்சள் ரூ. 15 லட்சத்துக்கு விற்பனையானது.
தற்போதைய ஏலத்தில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. மற்ற விற்பனை நிலையங்களை விட விவசாயிகளுக்குக் குவிண்டாலுக்கு ரூ. 200 அதிகம் கிடைத்ததாக   கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com