உலக திறனாளர்கள் கண்டறியும் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான உலக திறனாளர்கள் கண்டறியும் தடகளப் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான உலக திறனாளர்கள் கண்டறியும் தடகளப் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில், 2018 - 2019 ஆண்டுக்குரிய, மாவட்ட அளவில்  உலக திறனாளர்களைக் கண்டறியும் தடகளப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இப்போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன் தொடக்கி வைத்தார். இதில் மாவட்டத்தில் உள்ள அரசு,  அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 7, மற்றும் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 100 மீ.,  200 மீ.,  400 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. 
மேலும், முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 
மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com