நாளை பேட்டை பஞ்சமுக விநாயகர், புதுமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பரமத்தி வேலூர் பேட்டை பஞ்சமுக விநாயகர் மற்றும் புதுமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.

பரமத்தி வேலூர் பேட்டை பஞ்சமுக விநாயகர் மற்றும் புதுமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர் பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, ஸ்ரீ சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 19-ஆம் தேதி மாலை ஆச்சாரியார் அழைப்பு, விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம் மற்றும் வாஸ்து ஹோமம் நடைபெற்றது.  புதன்கிழமை காலை பக்தர்கள் காவிரியாற்றுக்குச் சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். காலை 9.30 மணிக்கு மேல் விக்னேஷ்வரபூஜை, தீப பூஜை, தனபூஜை மற்றும் மகா தீபாராதனை,  மாலை 6 மணிக்கு மேல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா ஆராதனை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக பூஜை, பைரவ ஹோமம், சீதாளாதேவி ஹோமமும், மாலை 6.30 மணிக்கு மேல் மகா தீபாராதனை, கோபுர கண் திறப்பு நிகழ்ச்சி  நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் மகா பூர்ணாஹுதி,  யாத்ர தானம்,   
கலசம்  புறப்பாடு, காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, சக்தி கண்ணனூர் மகா மாரியம்மன், பக்த ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com