எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

பரமத்தி வேலூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா எஸ்.வாழவந்தி ஊராட்சி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 


பரமத்தி வேலூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா எஸ்.வாழவந்தி ஊராட்சி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
மோகனூர் ஒன்றியத்துக்குள்பட்ட எஸ்.வாழவந்தி ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு விழா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 62 ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஊராட்சி கலையரங்கில் நடைபெற்றது. 
விழாவிற்கு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நல்லதம்பி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். எஸ்.வாழவந்தி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அன்புச்செழியன், தமிழ்செல்வி கந்தசாமி, பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் மருதவீரன், தொடக்கப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஈஸ்வரன்,  உயர் நிலைர்பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் தனபாக்கியம்குமார், தொடக்கப்பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரமதிசக்திவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மோகனூர் வட்டாரக் கல்வி அலுவலர் அருள்மணி, பரமத்தி காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர். விழாவில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
முடிவில் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். முன்னதாக தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com