விலை உயர்வால் செங்கரும்பு விற்பனை மந்தம்

பொங்கல் பண்டிகை காலத்தில் விற்பனையாகும் செங்கரும்பு விலை அதிகரித்துள்ளதால், விற்பனை குறைந்துள்ளது.

பொங்கல் பண்டிகை காலத்தில் விற்பனையாகும் செங்கரும்பு விலை அதிகரித்துள்ளதால், விற்பனை குறைந்துள்ளது.
உழவுக்கு வித்திட்ட இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி நிகழ் ஆண்டு பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அன்று பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி நாமக்கல் நகரில் கரும்பு கட்டுகள், மஞ்சள் கொத்துகள், வாழைத்தார்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.   இதேபோல் மண் பானைகளின் விற்பனையும் சிறப்பாக நடைபெற்றது.
பொங்கல் சீர்வரிசை கொடுக்க, வீட்டுக்கு பொங்கலிடுவதற்கு உள்ளிட்டவற்றுக்காக அளவிற்கேற்றாற்போல் மண்பானை, அடுப்புகள், மண்ணாலான மூடிகள் மற்றும் கரும்பு கட்டுகள், மஞ்சள் கொத்துகள், வாழைத்தார்கள் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
10 கரும்புகளைக் கொண்ட ஒரு கட்டு ரூ. 500 முதல் ரூ. 700-க்கும் விற்பனையானது. மஞ்சள் குலைகள் ஒரு ஜோடி ரூ. 40-க்கு விற்பனையானது. 20 பழங்கள் அடங்கிய வாழை சீப் ரூ. 100-க்கும் விற்பனையானது.  மண் பானைகள் ரூ. 50, ரூ. 100, ரூ. 150, ரூ. 200 ஆகிய விலைகளில் விற்கப்படுகின்றன.
ஒத்த அடுப்பு ரூ. 150-க்கும், இரட்டை அடுப்பு ரூ. 250-க்கும் விற்பனையானது. மண்ணாலான மூடிகள் ரூ. 50-க்கு விற்பனையானது. கரும்பு வரத்துக் குறைந்துள்ளதால் செவ்வாய்க்கிழமை காலை கட்டின் விலையும் ரூ. 1,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. விலை உயர்வால் கரும்பு வாங்க வரும் மக்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இருப்பினும் நஷ்டத்துக்கு வியாபாரம் செய்ய முடியாது. எங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்குதான் விற்க முடியும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com