நிலையூர் - கம்பிக்குடி கால்வாயில் மழைநீர்  8 ஆண்டுகளுக்கு பின் கண்மாய்கள் நிறைந்தன

திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர்-கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாயில் 8 ஆண்டுகளுக்கு பின் மழைநீர் 

திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர்-கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாயில் 8 ஆண்டுகளுக்கு பின் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இப்பகுதியில் உள்ள கண்மாய்கள் நிறைந்து வருகின்றன. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 நிலையூர் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் மூலம் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் 71 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும். இதில், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் மட்டும் 21 கண்மாய்கள் உள்ளன. கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தென்கால், நிலையூர், பானாங்குளம், குறுக்கிட்டான் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் நிறைந்துள்ளன.
இந்நிலையில், நிலையூர் நீட்டிப்பு கால்வாயில் அதிகளவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 8 ஆண்டுகளுக்குப் பின், தற்போது நிலையூர் கண்மாய் முழுகொள்ளளவை எட்டியுள்ளது.
இதையடுத்து நிலையூர் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் மூலம் அய்யாபட்டி, தொட்டியபட்டி, வளையபட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் விவசாயப் பணிகளையும் தொடங்கியுள்ளனர். 
தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் நிலையூர் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் மூலம் மதுரை மாவட்டத்தில் 51 கண்மாய்கள் உள்பட விருதுநகர் மாவட்டம் வரை சுமார் 71 கண்மாய்களுக்கு அடுத்தடுத்து தண்ணீர் செல்லும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com