டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் சிஐடியூ மாநாட்டில் தீர்மானம்

டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சிஐடியூ டாஸ்மாக் ஊழியர் சங்க மாநாட்டில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சிஐடியூ டாஸ்மாக் ஊழியர் சங்க மாநாட்டில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்ட சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் டி.சிவக்குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட பொருளாளர் இரா.லெனின் தொடக்கி வைத்தார். மாநாட்டில், டாஸ்மாக் கடைகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.   ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை மிரட்டி அதிகாரிகள் பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பல மாதங்களாக நிலுவையில் உள்ள எப்டிசி தொகையை நிலுவையுடன் வழங்கிட வேண்டும். பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு சிறப்பு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மாநாட்டில் மாவட்டத் தலைவர் இரா. லெனின்,செயலர் டி.சிவகுமார், பொருளாளர் வி.செந்தில்குமார் உள்ளிட்ட 13 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com