நேரு யுவகேந்திரா சார்பில் தேசப்பற்று பேச்சுப்போட்டி

நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவில் நடைபெற உள்ள தேசப்பற்று பேச்சுப்போட்டியில் பங்கேற்க

நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவில் நடைபெற உள்ள தேசப்பற்று பேச்சுப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  வரும் 2019-ஆம் ஆண்டில் குடியரசு தின கொண்டாட்டத்தில் அதிகளவில் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்யும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் நேரு யுவகேந்திரா சார்பில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இளைஞர்களிடையே தேசபக்தி உணர்வை உருவாக்குவது,  தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்துவது, அரசுத் திட்டங்களை அறிந்து கொள்ளச் செய்வது என்ற அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி, தியாகராஜர் கலை அறிவியல் கல்லூரியில் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. தேசப்பற்று மற்றும் தேசக் கட்டுமானம் 
(P​a‌t‌r‌i‌o‌t‌i‌s‌m a‌n‌d Na‌t‌i‌o‌n B‌u‌i‌l‌d‌i‌n‌g)  என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படும். கால அளவு 10 நிமிடங்கள். 18 வயது முதல் 29 வயதுக்கு உள்பட்ட இருபாலரும் கலந்து கொள்ளலாம். ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே பேச வேண்டும்.
  மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். முதல் 3 இடங்களைப் பெறுபவர்கள் மாநிலப் போட்டிக்கு பரிந்துரைக்கப்படுவர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு பரிந்துரைக்கப்படுவர்.  தேசிய அளவிலான போட்டியில் முதல் பரிசாக ரூ. 2 லட்சம், 2-ஆம் பரிசாக ரூ.1 லட்சம், 3-ஆம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.  
 போட்டியில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் மதுரை கே.கே.நகர்,  எண்:30 ஆசாத் தெருவில் உள்ள  நேருயுவகேந்திரா அலுவலகத்தில் போட்டிக்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இதுதொடர்பான விவரங்களுக்கு 0452-2539237 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com