தே.கல்லுப்பட்டி, பேரையூரில் ரூ.5.5 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

தே.கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் பேரூராட்சிகளில் ரூ.5.5 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளை

தே.கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் பேரூராட்சிகளில் ரூ.5.5 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
 தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கமைப்பு நிதி திட்டத்தில் தே.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு ரூ. 3 லட்சமும், பேரையூர் பேரூராட்சிக்கு ரூ.2.5 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறவழிச் சாலையை மேம்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வேறெந்த பேரூராட்சியிலும் இல்லாத வகையில் சாலை மேம்பாட்டுக்காக இத்தகைய பெரும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. இப்படியிருக்க தமிழக அரசு மீதும், மத்திய அரசு மீதும் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே குற்றஞ்சாட்டி வருகிறார். இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது மத்தியில் ஆட்சியில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசும்,  அவர்களுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவும் தான். போர் நிறுத்தம் என ஏமாற்றி அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்க உறுதுணையாக இருந்தது அவர்கள் தான். வரும் 25-ஆம் தேதி நடைபெறும் கண்டனக் கூட்டத்தில் இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்ல உள்ளோம் என்றார்.
 நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் லட்சுமி, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார்,  பேரையூர் வட்டாட்சியர் இளமுருகன்,  பேரூராட்சி செயல்அலுவலர்கள் சின்னசாமி பாண்டியன் (தே.கல்லுப்பட்டி), முருகேசன் (பேரையூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com