கூடலழகர் பெருமாள் கோயிலில் நீதிபதி ஆய்வு

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கான வசதிகள், கோயில்  பராமரிப்பு தொடர்பாக மதுரை மாவட்ட

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கான வசதிகள், கோயில்  பராமரிப்பு தொடர்பாக மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
    தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கான வசதிகள், கோயில் வளாகம் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாவட்ட நீதிபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
 இதன்படி, மதுரையில் பல்வேறு கோயில்களிலும் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன், கூடலழகர் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.  சுவாமி சன்னதி, யாகசாலை, சுற்றுப் பிரகாரம், நந்தவனம், ஜெனரேட்டர் அறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் நீதிபதி ஆய்வு செய்தார். அப்போது கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, உதவி ஆணையர் அனிதா விளக்கம் அளித்தார். 
  கோயில் வளாகத்தில் தற்போது 18 சிசிடிவி காமிராக்கள் இருப்பதாகவும்,  மேலும் ரூ.25 லட்சத்தில் கூடுதலாக காமிராக்கள் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு, ரூ.3 கோடியில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
  கோயிலின் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்த நீதிபதி, கோயில் வளாகத்தை சுகாதாரமாகப் பராமரிக்க அறிவுரை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com