ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும்: வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். 

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். 
   சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:       
   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தமிழக அரசு,  கொள்கை அளவில் முடிவு எடுத்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியிருக்க வேண்டும்.  அப்படி செய்திருந்தால் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கான முயற்சிகள் நடந்திருக்காது. இதைத் தான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வழக்கு விசாரணையின்போது கேட்டனர். அவ்வாறு நிறைவேற்றி இருந்தால் தேசிய பசுமை தீர்ப்பாயம், நியமித்த குழு ஆய்வுக்கு வருவதை தடை செய்திருக்கலாம். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்க முயற்சிகள் நடக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால்,  ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் அரசியல் கட்சிகளின் ஒருமித்த போராட்டமாக மாற வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com