வண்டியூர் பூங்காவில் தூய்மைப் பணி: மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு

மதுரை மாநகராட்சி வண்டியூர் பூங்காவில் தூய்மையே சேவை திட்ட பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் பங்கேற்று தூய்மை சேவையில் ஈடுபட்டார்.


மதுரை மாநகராட்சி வண்டியூர் பூங்காவில் தூய்மையே சேவை திட்ட பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் பங்கேற்று தூய்மை சேவையில் ஈடுபட்டார்.
மதுரை மாநகராட்சியில் கடந்த 19 ஆம் தேதி முதலே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழான தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், சனிக்கிழமை மாநகராட்சிப் பகுதியில் உள்ள முக்கிய பூங்காக்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
அதில், மதுரை கே.கே. நகர் பகுதியில் வண்டியூர் கண்மாய் கரையோரம் உள்ள பூங்காவை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியும், மதுரை மாநகராட்சியும் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டன.
இதையடுத்து, மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல மேலாளர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் தலைமையில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
அப்போது, பூங்காவில் புல் தரைகளில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை அப்புறப்படுத்தினர்.
மேலும், யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் பூங்காக்களில் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்கும் வகையில் நீலம் மற்றும் பச்சை நிற 14 சிறிய குப்பைக் கூடைகளும் வழங்கப்பட்டன.
பூங்கா தூய்மைப் பணியில், வங்கியின் துணை மண்டல மேலாளர் பென்னி ஸ்டீபன் மற்றும் வங்கிப் பணியாளர்கள், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இளையராஜா, சுகாதாரப் பிரிவினர் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com