மாடக்குளம் கண்மாய்க்கு வரும் தண்ணீரை தடுப்பதாக புகார்

மாடக்குளம் கண்மாய்க்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் முயற்சியாக, ஷட்டர் உடைக்கப்பட்டு கான்கிரீட்

மாடக்குளம் கண்மாய்க்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் முயற்சியாக, ஷட்டர் உடைக்கப்பட்டு கான்கிரீட் கலவையால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாடக்குளம், பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியது:
மதுரை மாடக்குளம் கண்மாய்க்கு நீர் திறக்கப்படும் இரு ஷட்டர்களில் ஒரு ஷட்டர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் கண்மாய்க்கு குறைவான அளவிலேயே தண்ணீர் வருகிறது. இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், வடிவேல்கரை மதகு வழியாக மாடக்குளம் கண்மாய்க்கு வந்து சேரும் நீரை தடுக்கும் வகையில் சில தனிநபர்கள், ஷட்டரை உடைத்து கான்கிரீட் கலவையைக் கொட்டி அடைத்துள்ளனர். இதுகுறித்து மதுரை மேற்கு வட்டாட்சியர் தலைமையில் பொதுப்பணித் துறையினர், காவல் துறையினர்  முன்னிலையில் மாடக்குளம் மற்றும் வடிவேல்கரை கிராமத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும்  இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
மதுரை நகரின் பெரும்பாலான பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக இருககும் மாடக்குளம் கண்மாயில் நீர் நிரப்புவதற்கு, 2 ஷட்டர்கள் வழியாகவும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com