திருநகரில் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி தொடக்கம்: 28 அணிகள் பங்கேற்பு

திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும்  இருந்து 28 அணிகள் பங்கேற்றுள்ளன. 
மறைந்த ஹாக்கி வீரர்கள் பாலசுப்பிரமணி, ஜெய்சிங், பழனியாண்டவர், மெய்யப்பன் ஆகியோர் நினைவாக திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் 20 ஆவது ஆண்டு மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி  திருநகர் அண்ணா பூங்கா மைதானத்தில் தொடங்கியது. போட்டியை போதை தடுப்புப்பிரிவு துணை 
கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், திருநகர் காலல் ஆய்வாளர் முத்துப்பாண்டி  ஆகியோர் தொடங்கி  
வைத்தனர்.  சென்னை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 28 அணிகள் பங்கேற்றன. 
நாக் அவுட் முறையில் நடைபெறும், இப்போட்டி  பிப்ரவரி 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் பாளை பிரண்ட்ஸ் அணியும், வாடிப்பட்டி ஹாக்கி டேலண்ட் அணியும் மோதின. இதில் 3 - 1 என்ற கோல் கணக்கில் பாளை பிரண்ட்ஸ் அணி வென்றது. 
இதையடுத்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சென்னை ஆயுதப்படை போலீஸ் அணி, சங்ககிரி எஸ்.எஸ்.ஓ.எஸ்.  அணியுடன் மோதியது. இதில் 3 -1 என்ற கோல் கணக்கில் சென்னை ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து வரும் 24 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது. வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பை மற்றும் 
பரிசுகள் வழங்கப்பட  உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com