டோக் பெருமாட்டி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் கணிதம் மற்றும் கணித அறிவியல் துறைகள் சார்பில் கணிதம் மற்றும்

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் கணிதம் மற்றும் கணித அறிவியல் துறைகள் சார்பில் கணிதம் மற்றும் கணித்தலின் நவீன வளர்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. 
இதில் கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் தலைமை வகித்து பேசியது: தமிழ், ஆங்கிலம் போலவே கணிதமும் ஒரு மொழி, அது தர்க்கவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் சக்தி வாய்ந்தது. 
பல்வேறு துறைகளின்  கூட்டு ஆராய்ச்சி மூலம் துறைகளுக்கு இடையே உள்ள எல்லைகளைத் தாண்டி விரிவுபடுத்த இயலும் என்றார்.
பிரிட்டனில் உள்ள லிவர்பூல் ஹோப் பல்கலைக் கழக கணிதத் துறை பேராசிரியர் கே.ஜி.சுப்ரமணியன் சிறப்புரையில் பேசும் போது, கணிதம் மற்றும் கணினிஅறிவியலின் தொடர்புபடுத்துவதற்கான முதுகெலும்பாக கோட்பாட்டு கணினி அறிவியல் திகழ்கிறது. கணினி அறிவியலின் ஒரு பிரிவாகிய கிரிப்டோகிராபியில் கணிதம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற தொழில்நுட்ப அமர்வில் கொழும்பு கணிதம் மற்றும் மேலாண்மை கல்லூரியைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் டபிள்யூ.ஜி.எஸ்.கொனரசிங்கே மூலதன சந்தை முதலீட்டுக்கான சமா வட்ட மாதிரி குறித்து விரிவுரையாற்றினார்.
தாய்லாந்து பயாப் பல்கலைக் கழக பேராசிரியர் ராபர்ட் பாட்சிங்கர் தரவுப் பகுப்பாய்வில் நவீன போக்குகள் குறித்து பேசினார். 
புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பேராசிரியர் சோனாஜாரியா மின்ஸ் ஸ்பேஷில் கம்யூட்டிங் மற்றும் சவால்கள் குறித்து பேசினார்.
இதில் சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உள்பட வெளிநாடுகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. முன்னதாக கல்லூரியின் கணிதவியல் துறைத் தலைவர் நிர்மலா ரெபெக்கா பால் வரவேற்றார்.  கணினி அறிவியல் துறைத் தலைவர் ஜெயச்சந்திரா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com