உணவுப் பாதுகாப்பு அலுவலர் நியமன அறிவிப்பாணைக்குத் தடை கோரி மனு

உணவுப் பாதுகாப்பு  அலுவலர் பணியிட நியமனம் தொடர்பான அறிவிப்பாணைக்குத் தடை விதிக்கக் கோரும்

உணவுப் பாதுகாப்பு  அலுவலர் பணியிட நியமனம் தொடர்பான அறிவிப்பாணைக்குத் தடை விதிக்கக் கோரும் மனுவுக்கு தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,  சுகாதாரம் மற்றும் குடும்பநலன் துறைச் செயலர்கள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி உள்ளிட்ட 31 பேர் தாக்கல் செய்திருந்த  மனு விவரம்: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் கடந்த 20.6.2011ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 
 இச்சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுபாட்டுத் துறை உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில்,  உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதார ஆய்வாளராக இருந்த 584 பேர், புதிதாக தொடங்கப்பட்ட   உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுபாட்டுத் துறையில் உணவுப் பாதுகாப்பு அலுவலராக கடந்த 2010 முதல்  நியமனம் செய்யப்பட்டனர்.
  இந்நிலையில், எங்கள் பணியிடத்துக்கு புதிதாக ஆள்களைத்  தேர்வு செய்வதற்காக உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுபாட்டுத் துறையில் 20.12.2018 இல் முடிவு எடுக்கப்பட்டு, விரைவில் அறிவிப்பாணை வெளியிடப்பட உள்ளது.
எனவே, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம் தொடர்பாக  20.12.2018 இல்  எடுக்கப்பட்ட முடிவுக்கும் அதுகுறித்த அறிவிப்பாணைக்கும் தடை விதிக்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர். மகாதேவன் முன் விசாரணைக்கு வத்தது.  அப்போது  இதுகுறித்து, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர், சுகாதாரம் மற்றும் குடும்பநலன் துறைச் செயலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 11ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com