இணையவழி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்தல்

உள்நாட்டு வியாபாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இணையவழி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.


உள்நாட்டு வியாபாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இணையவழி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய மாநாடு மதுரையை அடுத்த வலையங்குளத்தில் உள்ள ஆர்.எல்.கல்வி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த மாநாட்டை வாழும் கலை மைய நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தொடக்கி வைத்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய இணை அமைப்பாளர் அஸ்வினி மகாஜன் செய்தியாளர்களிடம் கூறியது:
நமது நாட்டின் தொழில், வர்த்தகம், விவசாயத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி சுதேசி விழிப்புணர்வு இயக்கம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு தேசிய மாநாட்டிலும் எடுக்கப்படும் முடிவுகளைத் தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கான பணிகளுக்குச் செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மதுரையில் நடைபெறும் தேசிய மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தெற்கு ஆசிய நாடுகளுடனான தாராள வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா கைவிட வேண்டும். ஏற்கெனவே, சீனப் பொருள்களின் ஆதிக்கம் உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. தெற்கு ஆசிய நாடுகளுடனான தாராள வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு பாதகமாக இருப்பதால் அதைக் கைவிட வேண்டும்.
இந்தியாவில் இணையதள வர்த்தகம் தற்போது பெருகி வருகிறது. இதனால், சிறு வணிகர்கள், கடைக்காரர்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறக் கூடிய இந்த இணைய வழி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்தியாவுக்கென சுயசார்பு உடைய தொழில்-வர்த்தக கொள்கை அவசியமாக இருக்கிறது. நமது வளங்களைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக வளர்சிக்கான கொள்கையை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்துகிறது. 
வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறுவது தொடர்ந்து வருகிறது. இதனால் உள்நாட்டில் இருக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. 
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மாநாட்டில் முக்கிய அம்சங்களாக விவாதிக்கப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com