ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்க பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்துôர் கதலிநரசிங்கப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 


ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்துôர் கதலிநரசிங்கப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
இக்கோயில் விழா கொடியேற்றம் ஏப்ரல் 11இல் தொடங்கியது. இதைத் தொடர்ந்த விழா நாள்களில் அன்னம், சிம்மம், ஆஞ்சநேயர், கருடன், ஆதிசேஷன், கஜேந்திரன் ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வந்து அருள்பாலித்தார். 
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 17 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் 8 ஆம் நாள் நிகழ்ச்சியில் குதிரை வாகனத்தில் சுவாமி வலம் வந்தார். 9 ஆம் நாளில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகளுடன் திருத்தேரில் எழுந்தருளினார். 
சனிக்கிழமை மாலை சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா' கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருத்தேர் நிலைக்கு வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. 
விழாவில் ஞாயிறறுக்கிழமை பூப்பல்லக்கு மற்றும் சப்த வர்ணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com