363 அங்கன்வாடி பணியிடங்களுக்கு 4,487 பேர் விண்ணப்பம்: இன்று முதல் நேர்காணல்

தேனி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 363 அங்கன்வாடி, குறு அங்கன்வாடி

தேனி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 363 அங்கன்வாடி, குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு 4,487 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
 அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 363 பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்குத் தகுதியுள்ள பெண்கள் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் பிப்ரவரி 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.  இதன்படி, ஆண்டிபட்டி ஒன்றியத்தில் காலியாக உள்ள 23 அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 388 பேரும், 17 உதவியாளர் பணிக்கு 229 பேரும் விண்ணப்பித்துள்ளனர். போடி ஒன்றியத்தில் 15 அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 333 பேர், 19 உதவியாளர் பணிக்கு 193 பேர் விண்ணப்பித்துள்ளனர். சின்னமனூர் ஒன்றியத்தில் 17 அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 288 பேர், 13 உதவியாளர் பணிக்கு 194 பேர், கம்பம் ஒன்றியத்தில் 51 அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 404 பேர், 54 உதவியாளர் பணிக்கு 204 பேர், உத்தமபாளையம் ஒன்றியத்தில் 5 அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 227 பேர், 22 உதவியாளர் பணிக்கு 231 பேர், க.மயிலை ஒன்றியத்தில் 16 அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 318 பேர், 12 உதவியாளர் பணிக்கு 173 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பெரியகுளம் ஒன்றியத்தில் 21 அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 451 பேர், 28 உதவியாளர் பணிக்கு 206 பேர், தேனி நகர்புறத்தில் 5 அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 18 பேர், 20 உதவியாளர் பணிக்கு 241 பேர், தேனி ஒன்றியத்தில் 9 அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 110 பேர், 16 உதவியாளர் பணிக் 117 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தப் பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பித்த இடங்களில் பிப்ரவரி 21 முதல் நேர் காணல் நடைபெறுகிறது. இது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தனித் தனியே தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com