கௌரவ ஊக்கத் தொகை பெற 28,633 விவசாயிகள் கணக்கெடுப்பு

தேனி மாவட்டத்தில் பாரத பிரதமரின் விவசாயிகள் கௌரவ ஊக்கத் தொகை பெறுவதற்கு

தேனி மாவட்டத்தில் பாரத பிரதமரின் விவசாயிகள் கௌரவ ஊக்கத் தொகை பெறுவதற்கு வருவாய் துறை மற்றும் வேளாண்மைத் துறை மூலம் 28,633 விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். 
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பாரதப் பிரதமரின் விவசாயிகள் கௌரவ ஊக்கத் தொகை வழங்கும்  திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெறுவதற்கு தகுதியுள்ள 28,633 சிறு, குறு விவசாயிகள் வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். 
இத் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெறுவதற்கு தகுதியுள்ள பயனாளிகள் பட்டியல் இது தொடர்பான கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலக தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்: இந்தப் பட்டியலில் இடம் இடம் பெறாமல் விடுபட்ட, 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கௌரவ ஊக்கத் தொகை பெறுவதற்கு தங்களது நிலத்தின் பட்டா, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com