போடியில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு நேர்முகத் தேர்வு: 370 பெண்கள் பங்கேற்பு

போடியில், வியாழக்கிழமை நடைபெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

போடியில், வியாழக்கிழமை நடைபெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
    தேனி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளில் முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கான 350-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் விண்ணப்பம் செய்தனர். இவர்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
     இந்த விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து நேர்முகத் தேர்வுக்கான அழைப்பிதழும் நேரடியாக வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் விண்ணப்பம் பெற்ற இடங்களிலேயே வியாழக் கிழமை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதன்மை அங்கன்வாடி பணியாளர் காலியிடங்கள் 15-க்கும், துணை பணியாளர் பணியிடங்கள் 19-க்கும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் 370 பெண்கள் பங்கேற்றனர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சாந்தி நேர்முகத் தேர்வை நடத்தினார். தேர்வு முடிவுகள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com