தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல்

தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார்.

தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
இதைத்தொடர்ந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் குமரகுருபரன் (45) என்பவர், தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ம.பல்லவி பல்தேவிடம் மனுதாக்கல் செய்தார். வழக்குரைஞரான குமரகுருபரன் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
தேனி மக்களவைத் தொகுதி, பெரியகுளம் (தனி) மற்றும் ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதி வேட்பு மனு தாக்கல் மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனு பரிசீலனை மார்ச் 27-ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை மார்ச் 29-ஆம் தேதிக்குள் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். 
மார்ச் 29-ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
பெரியகுளம்(தனி) சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்லுக்கு பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவகத்திலும், ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. இவ்விரு சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வேட்பு மனுதாக்கல் தொடங்கிய முதல் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com