கம்பம், ஆண்டிபட்டி பகுதியில் ரூ. 5 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கம்பம்மெட்டு  மலை அடிவாரம் பழைய

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கம்பம்மெட்டு  மலை அடிவாரம் பழைய சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சேதுகுமார் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தில் கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்த சதன் (54) என்பவர் ரூ. 1.82 லட்சம், மற்றொரு வாகனத்தில் வந்த தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியைச் சேர்ந்த அமலதாஸ் (47) என்பவரிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம், காரில் வந்த கம்பம் நேருஜி தெருவைச் சேர்ந்த சிவமணி என்பவரிடம் ரூ.73 ஆயிரத்து ஐநூறு என மொத்தம்  ரூ.3 லட்சத்து 96 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. 
பணத்துக்கான ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி,   உத்தமபாளையம் சார் நிலைக் கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தாலுகா பொன்னிலம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து வருசநாடு பகுதிக்குச் சென்ற ஒரு காரை சோதனை செய்தனர். காரில் ரூ.80 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. 
பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் காரை ஓட்டி வந்த பெண்ணிடம் விசாரணை செய்தனர். அவர் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த முத்துக்காளை என்பவரின் மனைவி  பச்சைக்கிளி (46) என்பது தெரியவந்தது. 
இதனையடுத்து பணத்திற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்று செல்லும்படி கூடிய பறக்கும்படை அதிகாரிகள், பணத்தை ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com