நிரவி காஜியார் நியமனத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் புகார்

நிரவி காஜியார் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், நியமன ஆணையை ரத்து செய்யவேண்டும் எனவும் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நிரவி காஜியார் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், நியமன ஆணையை ரத்து செய்யவேண்டும் எனவும் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
காரைக்கால் பகுதி நிரவி முஸ்லிம் ஜமாஅத்தார்கள், ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் எஸ்.ஆனந்த்குமார் ஆகியோர் மாவட்ட சார்பு ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜாவை திங்கள்கிழமை  சந்தித்து அளித்த மனு :
நிரவி கொம்யூனில் அப்துல் சுக்கூர் என்பவரை புதுச்சேரி அரசு காஜியாராக நியமித்துள்ளது.  காஜியார் சட்டத்தின்படி, ஒரு பகுதிக்கு காஜியாரை நியமிக்க சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளையெல்லாம் மீறி புதிதாக காஜியாரை ஆளுநர் ஒப்புதலோடு வஃக்பு வாரிய துணைச் செயலர் நியமித்துள்ளார். பல உண்மைகளை துணைநிலை ஆளுநரிடம் மறைத்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஏற்கெனவே முகம்மது சுல்தான் என்பவர் 2006 முதல் துணை காஜியாராக நிரவியில் பணியாற்றிவருகிறார். 200-க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்திவைத்த அனுபவமிக்கவர். அனுபவமுள்ளவர் பொறுப்பில் இருக்கும்போது, இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மையினரை  கலந்தாலோசிக்காமல் புதிய நபரை நியமித்துள்ளனர்.
இந்த புதிய அரசாணைக்கு அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனர். நிரவியில் இஸ்லாமியர்களிடையே இது  பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, புதிய ஆணையை ரத்து செய்யவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com